கே எல் ராகுல், மார்க்க ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் போன்ற 3 வீரர்களை தனது அணியில் இணைத்த லக்னோ அணி; எத்தனை கோடி தெரியுமா !!

2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி மூன்று நட்சத்திர வீரர்களை தங்களது அணியில் தேர்ந்தெடுத்துள்ளது.

2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவைப்படும் புதிய வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக திட்டங்களை தீட்டி வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தக்க வைத்து விட்டது. ஆனால் புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளும் ஏதேனும் மூன்று வீரர்கள் தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற விதி இருந்தால் இரண்டு அணிகளுமே மிகத் தீவிரமாக எந்த வீரரை தனது அணியில் இணைக்கலாம் என்று நீண்ட காலமாகவே யோசித்துக் கொண்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அகமதாபாத் அணி தனது அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான்,சுப்மன் கில் ஆகிய மூன்று வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணியும் இன்று தனது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கே எல் ராகுல்

முதன்மை வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கே எல் ராகுலை 15 கோடி கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளது, கேஎல் ராகுல் 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இனிமேல் விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருந்த நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணியின் கேப்டனாக ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கருத்துகள் வெளிவந்தது, அதே போன்று கே எல் ராகுல் லக்னோ அணியில் தேர்வாகியுள்ளார்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ்

ராகுலை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மார்க்கஸ்டாய்னிஸை 11 கோடி ரூபாய் கொடுத்து இரண்டாவது வீரராக தேர்ந்தெடுத்துள்ளது. மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். ஆனால் இவரை டெல்லி அணி தனது அணியில் தக்க வைக்கவில்லை, இதன் காரணமாக வருகிற தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இவரை ஏலத்திற்கு முன்பே லக்னோ அனி தேர்ந்தெடுத்து விட்டது.

ரவி பிஷ்னாய்

வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை 3வது வீரராக 4 கோடி ரூபாய் கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளது.

Mohamed:

This website uses cookies.