சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கே.எல் ராகுல் !!

விஸ்டன் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கே.எல் ராகுல்

விளையாட்டு உலகின் பிரபல பத்திரிக்கையான விஸ்டன் இந்தியா, இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் கே.எல் ராகுலை தேர்ந்தெடுத்துள்ளது.

கிரிக்கெட் உலகின் பைபளிள் என்று போற்றப்படும் விஸ்டன் இந்தியா மாத இதழ் கடந்த 1889ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தில் தங்களது பெயர் இடம்பெறுவதையே ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரமாக கருதுவர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த இதழில், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர்ரான கே.எல் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தனது அட்டைபடத்தில், சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி வரை சென்ற இந்திய பெண்கள் அணி வீராங்கணைகளின் புகைப்படத்தை பதிவிட்டு அவர்களை கவுரத்துள்ளது. இதற்கு முன்னதாக விஸ்டன் இந்தியாவின் அட்டை படத்தில் கோஹ்லி, டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

 அதே போல், இந்த வருடத்தின் தலை சிறந்த இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை விஸ்டன் இந்தியா தேர்வு செய்துள்ளது.

ஏறத்தாழ 900 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

கிரிக்கெட் உலகின் பைபளிள் என்று போற்றப்படும் விஸ்டன் இந்தியா மாத இதழ் கடந்த 1889ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தில் தங்களது பெயர் இடம்பெறுவதையே ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரமாக கருதுவர்.

Mohamed:

This website uses cookies.