ஒரே போட்டியில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து கே.எல் ராகுல் ; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !!

ஒரே போட்டியில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து கே.எல் ராகுல் ; பாராட்டும் கிரிக்கெட் உலகம்..

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படித்த கே எல் ராகுல். விராட் கோலியின் சாதனை காலி.

மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டன் பதவியிலவ்ருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இந்திய அணியின் அதிரடி வீரர் கே.எல் ராகுலுக்கு 2023 ஐபிஎல் தொடர் நல்ல துவக்கமாக அமைந்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 56 பந்துகளில் 74 ரன்கள் அடித்து அசத்திய கே.எல் ராகுல்., ஐபிஎல் தொடரில் 4000 ரன்கள் கடந்த வீரர் என்ற வரிசையில் இடம் பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இதுவரை 114 போட்டிகளில் பங்கேற்ற கேஎல் ராகுல் 4044 ரன்கள் அடித்துள்ளார், அதில் நான்கு சதங்களும் 32 அரை சதங்களும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில் அதிவேக 4000 கடந்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்த கே.எல் ராகுல்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக செயல்பட்டதன் மூலம் 4,000 ரன்களை கடந்த கே எல் ராகுல் குறைந்த இன்னிங்சில் (105 இன்னிங்ஸ்) 4000 ரன்கள் கடந்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

4000 ரன்களை கடக்க மற்ற வீரர்களுக்கு தேவபட்ட இன்னிங்க்ஸ்..

கிறிஸ் கெய்ல் – 112 இன்னிங்ஸ்

டேவிட் வார்னர் -114 இன்னிங்ஸ்

விராட் கோலி – 128 இன்னிங்ஸ்

ஏபிடி வில்லியர்ஸ் – 131 இன்னிங்ஸ்

கே.எல் ராகுல் – 105 இன்னிங்ஸ்

இப்படி அதிரடியான ஜாம்பவான்களே 4000 ரன்களை கடப்பதற்கு அதிக எண்ணிக்கை இன்னிங்ஸ் தேவைப்பட்டிருக்கும் நிலையில் கே எல் ராகுல் 105 இன்னிங்ஸில் இந்த சாதனையை முறியடித்துள்ளதால் கிரிக்கெட் வட்டாரங்கள் கேஎல் ராகுலை பாராட்டி வருகிறது. ஆனால் இதே பார்மை அவர் சர்வதேச இந்திய அணிக்காகவும் தொடர வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரையும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.