மீண்டும் விலகும் கே.எல் ராகுல்..? வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் வீரருக்கு அடிக்கும் ஜாக்பாட்; முக்கிய தகவல் வெளியானது
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தனது போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் சிலருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அடுத்த சில தினங்களில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக நிலவி வருகிறது, குறிப்பாக இந்திய அணியின் பெரிய பிரச்சனையான மிடில் ஆர்டரில் களமிறங்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவி வருகிறது.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
கே.எல் ராகுல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உள்பட முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை கே.எல் ராகுல் விலகினால், ஸ்டான்பை வீரராக அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் நேரடியாக அணியில் நுழைவார் என தெரிகிறது. இஷான் கிஷன் பெரும்பாலும் துவக்க வீரராக களமிறங்கியே பழக்கப்பட்டவர் என்பதால் மிடில் ஆர்டரில் களமிறங்க இஷான் கிஷனை விட சஞ்சு சாம்சனுக்கே இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல் ராகுல் காயத்தில் இருந்து விரைவாக குணமடைந்து வருகிறார். ஆனால் அவரால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாது என்பதை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் உறுதி செய்துள்ளார். அதே வேளையில் ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.