இவர் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் வசதியாகிவிட்டது என மனம் திறந்து பேசியிருக்கிறார் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டி வரை சென்ற பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக இருந்த அஸ்வின் அந்த அணியை பிளே-ஆப் சுற்றுக்கு கூட எடுத்துச் செல்லவில்லை. இதனால் இவர் மீது அதிருப்தியில் அணி நிர்வாகம் இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு வீரர்கள் மாற்றும் முறை மூலம் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அஸ்வின் சென்றுவிட்டார். இதனால் வருகிற 13வது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக கேஎல் ராகுல் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் இதற்கு முன்னர் பெங்களூரு அணிக்கு பல ஆண்டுகளாக ஆடினார். கடந்த 2 சீசங்களாக பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்.
இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு அதிக ரன் அடித்தவர் இவரே. பேட்டிங் மற்றும் கீபிங் இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படப் போகிறார்? என்பது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். ஏனெனில் இவர் இதற்கு முன்னதாக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் ஒருமுறைகூட கேப்டன் பொறுப்பை ஏற்றது இல்லை. இது இவருக்கு முதல் முறை கேப்டன் பொறுப்பாகும்.
பஞ்சாப் அணிக்கு புதிதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான அணில் கும்ளே பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
அனில் கும்ப்ளே கூறுகையில், “எனக்கு ராகுலை சிறுவயதில் பெங்களூரில் ஆடும்பொழுது தெரியும். மிகத் திறமையான பேட்ஸ்மேன் மேலும் பஞ்சாப் அணியில் இரண்டு வருடங்களாக ஆடிவருகிறார். அணி வீரர்களின் மன நிலைமை குறித்து நன்கு அறிந்து கொண்டிருப்பார். இவர் இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பு ஏற்றதால் அணி வீரர்களை இவருடன் சேர்ந்து எனக்கு புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள், பலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் லாவகமாக இருக்கும்.” என பேசினார்.