கே.எல் ராகுல் சந்திக்க போகும் பெரிய பிரச்சனையே இது தான்; எச்சரிக்கும் கவுதம் கம்பீர் !!

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான கௌதம் காம்பீர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் முன்னாள் கேப்டன் கே எல் ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார் இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை,இதன் காரணமாக புதிதாக இணைத்துள்ள லக்னோ அணியின் கேப்டனாக 17கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் நியமிக்கபட்டார்.

மேலும் 2022ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12,13ஆகிய தினங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை லக்னோ அணி உட்பட அனைத்து அணிகளும் செய்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டனாக கேஎல் ராகுல் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது, மேலும் 17 கோடி ரூபாய் என்ற அதிகப்படியான தொகைக்கு லக்னோ அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த தொகைக்கு ஏற்றவாறு கேஎல் ராகுல் செயல்படுவாரா என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விவாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணியின் கேப்டன் கே எல் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், கே எல் ராகுல் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக நெருக்கடியை சந்திக்க மாட்டார், அதற்கு பதில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே நெருக்கடியை சந்திப்பார், ராகுல் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் விளையாடுவதற்கு அணியில் உடனிருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டும், அதே போன்று ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணிக்கு நேர்மையாக இருக்கவேண்டும் ஐபிஎல் போட்டி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்திய அணி குறித்தான சிந்தனை இருக்கக்கூடாது, ஐபிஎல் தொடர் ஆரம்பித்த நான் முதல் இரண்டு மாதங்கள் வரை லக்னோ அணிக்காக மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கௌதம் காம்பீர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.