நல்லா இருக்கா? இல்லையா? புது ஜெர்ஸிக்கு எவ்வளவு மார்க்? கோலி கொடுத்த மதிப்பெண்!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்ஸி குறித்து பேசிய விராட் கோலி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இதன் வண்ணம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருநாள் போட்டிக்கு மட்டுமான இந்தச் சிறப்பான மாற்றம்.

ஆனால், இந்த ஜெர்ஸியே நிரந்தரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நீல நிறம்தான் எப்பொழுதும் நம்முடைய நிறம். அதனை அணிந்து கொள்வது மிகவும் பெருமையாக இருக்கும். உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரையில் இது ஒரு ஸ்மார்ட் கிட்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஜெர்ஸி குறித்து விராட் கோலியிடம் கேள்வி கேட்கப்பட்டது மீடியாவை சந்தித்தபோது இதற்கு பதிலளித்த அவர்….

‘இது நன்றாக இருக்கிறது இது எனக்கு பிடித்திருக்கிறது. என்னைப்  நான் இதற்கு 8/10 மதிப்பெண்கள் கொடுப்பேன். வெறுமனே நான் இதனைக் கூறவில்லை. உண்மையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார் விராட் கோலி

இந்த புதிய ஜெர்ஸியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய ஜெர்ஸியுடன் இந்திய வீரர்கள் இருக்கும்  புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதை வரவேற்றும் எதிர்த்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிற ஜெர்ஸியின் புகைப்படத்தை வெளி யிட்டு, ரசிகர்கள் சிலர் ’நாடு எங்கே போகிறது?’ என்று கேட்டுள்ளனர். மற்றும் சிலர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடை போல உள்ளது என்று கிண்டலடித்துள்ளனர். சிலர், ஸ்விக்கி ஊழியரின் உடையை குறிப்பிட்டு, கலாய்த்துள்ளனர்.

இந்தப் புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியை கலாய்த்து ரசிகர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர், “இந்த ஜெர்ஸி இந்தியன் ஆயில் கார்பரேஷன் உடை போல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர் பிசிசிஐயிடம், “நீங்கள் இந்த ஜெர்ஸியில் வீரர்களின் பெயருக்கு முன்னாள் ‘யோகி’ என்பதையும் சேர்த்து அச்சிட உள்ளீர்களா? உதாரணமாக யோகி தோனி, யோகி கோலி, யோகி ரோகித் … ” எனக் கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் மற்றொரு நபர் இந்த ஜெர்ஸியின் பின்னால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என அச்சிட்ட மாதிரி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல ஒரு தமிழ்நாட்டு ரசிகர், “இந்தப் புதிய ஜெர்ஸிக்கு முன்னுதாரணமாக இருந்த ஸ்விக்கிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.