அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுல் ஆடுவார்கள் – ஹின்ட் அடித்த கோலி

The All-India Senior Selection Committee has named Dinesh Karthik as the replacement for Wriddhiman Saha for the third and final Test against South Africa. He is set to join the team before the third Test.

’அடுத்தப் போட்டில் புதிதாக (கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக், சித்தார்த் கவுல்)  சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும்’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று இரவு நடந்தது.

Indian players form a group huddle during the Twenty20 International cricket match between Ireland and India at Malahide cricket club, in Dublin on June 27, 2018. 

இதில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 97 ரன்களும் தவான் 74 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப், சேஹல் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘ரோகித்தும் தவானும் நன்றாக ரன் குவித்து நல்ல இடத்துக்கு கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் அயர்லாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர்த்து மிடில் ஆர்டரில் சோதனை முயற்சியாக சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற மாதிரி அடுத்த போட்டி அமையும். இன்றைய போட்டியில் விளையாடாத சிலருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும்.

India’s KL Rahul during a training session ahead of their test match against South Africa at Feroze Shah Kotla stadium in New Delhi on Dec 1st 2015. Express photo by Ravi Kanojia.

சில தொடர்களில் அணியில் இடம் கிடைத்தும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடு கிறது. அதைப் போக்கும் விதமாகவும் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதை செயல்படுத்த இருக்கிறோம்’ என்றார்.

இதையடுத்து அயர்லாந்து அணியில் நேற்றைய போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உட்பட சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

Editor:

This website uses cookies.