ரொனால்டோ, மெஸ்ஸி – க்கு சமமாக இன்ஸ்டாகிராமில் சம்பாரிக்கும் கேப்டன் கோஹ்லி! ஒரு போஸ்டுக்கு இத்தனை கோடியா?

ரொனால்டோ, மெஸ்ஸி – க்கு சமமாக இன்ஸ்டாகிராமில் சம்பாரிக்கும் கேப்டன் கோஹ்லி! ஒரு போஸ்டுக்கு இத்தனை கோடியா?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டாப்-10 க்குள் நுழைந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி.

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை பிரபலங்கள் பலர் பயன்படுத்துவதால் அவர்களை பின்தொடர நாளுக்கு நாள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக்கொண்டு பிரபலங்களும் இதில் அதிகளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.

உலகெங்கிலும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வருகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இன்ஸ்டாகிராம் வழியாக அதிக சம்பாதித்த உலகின் டாப்–10 விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி, 6வது இடம் பிடித்துள்ளார்.

மார்ச் முதல் மே வரை இவர் பதிவிட்ட மூன்று பதிவுகளுக்கு இந்திய ருபாய் மதிப்பின்படி ரூ. 3.58 கோடி பெற்றிருக்கிறார். அதாவது, சராசரியாக கோஹ்லி வெளியிட்ட ஒரு போட்டோவுக்கு ரூ. 1.2 கோடி வரை வருமானம் வந்துள்ளது.

இந்த டாப்–10 பட்டியலில் இடம் பெற்ற உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் இவர் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் ரூ. 17 கோடி வரை கிடைத்தது. இரண்டாம் இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ரூ. 11.3 கோடி ரூபாயுடன் உள்ளார். பிரேசில் வீரர் நெய்மர் ரூ. 10.4 கோடி உடன் 3ஆம் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக, போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட 2019ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த முறை 100வது இடத்தில் இருந்த விராட்கோலி இம்முறை 66வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.