உலகக்கோப்பையில் ஜடேஜாவை கொண்டுவர கோஹ்லி திட்டம்!! ஏன்???

BIRMINGHAM, ENGLAND - JUNE 04: Virat Kohli (C) of India celebrates as Ravindra Jadeja captures the wicket of Azhar Ali of Pakistan during the ICC Champions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Michael Steele/Getty Images)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு தினப் போட்டிக்கு பிறகு, ​​தேசிய அணியில் இடம்பெறாதது ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவின் சுழல் ஆயுதம் எனக் கருதப்பட்டது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பையில் தேர்வாளர்கள் அவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க முடிவுசெய்தனர். இவர் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னர் இல்லை என்றாலும், அவர் உலகக் கோப்பைக்கான அணியில் தன்னை ஒரு வீரராக தற்போது பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முழு திறமை வெளிப்படுத்திய ஜடேஜா, 2019 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தகுதி பெற வாய்ப்புள்ளதாக அணி மேலாண்மை தலைவர் கூறியுள்ளார்.

“ஜடேஜா சில தனி திறமைகளை தனக்கென கொண்டுள்ளவர், இங்கிலாந்து மைதானங்களில் பந்து சுழற்சியை கண்டால் இவரின் பங்களிப்பு நிச்சயம் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல், அணியில் இருக்கும் ஒரே இடது-கை ஸ்பின்னர் இவர் தான். உலகக் கோப்பை போன்ற ஒரு நீண்ட வடிவ போட்டியில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும்.”

“ஜடேஜா அணியில் இருந்தால் நடுத்தர பேட்டிங்  பலப்படும். அவர் அனைத்து போட்டிகளிலும் அடிக்கவில்லை என்றாலும், சிறப்பாக ஹிட்களை அடிக்க கூடியவர்.  அத்துடன் மைதானத்தில் அவரது பீல்டிங் திறமையை மறந்துவிட முடியாது. ஸ்கொயர் பகுதியில் அசால்டாக 10-15 ரன்கள் அவரால் காப்பாற்ற முடியும். மிக பிரசரான போட்டிகளில், 10-15 ரன்கள் தங்கத்திற்கு ஒப்பானது.

குல்தீப் யாதவ், ஜடேஜா, யூசுவெந்திர சஹால் ஆகியோரில் இருவர் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றால், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் எதிரணியை பொறுத்து யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யட்டும்.

“பார்த்தால், வீரர்களை தீர்மானிப்பதில் நிறைய காரணிகள் உள்ளன, ஜடேஜா ஒரு பந்து வீச்சாளர் என்றாலும் ரன்கள் அடிக்க கூடியவர், மற்றும் மைதானத்தில் பில்டிங் மூலம் ரன்களை கட்டுப்படுத்த கூடியவர்,  குல்தீப் மற்றும் சேஹல் விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர்கள், மேலும் சஹால் மிகப்பெரிய விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தக்கூடியவர், இதை அணியின் நிர்வாகம் எதிர்பார்க்கும் ஒன்று. விக்கெட் எடுக்க பிரதான குறிக்கோள் உள்ளது அவரிடம், “என்று அவர் கூறினார்.

பெங்களூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்த சாகல், மொஹலியில் நடந்த ஒருநாள் போட்டியில் சாகசமாக விளையாடினார்.  “சின்சுவாமி டி 20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சு இயந்திரமாக பயன்படுத்தப்பட்டார். மொஹலியில், சேஹால் விக்கெட் பின்னால் தோனி இருக்கும்போது வேறு ஒரு பந்து வீச்சாளராக இருந்தார், எனவே ஒரு மோசமான ஆட்டத்தில் அவர் ஒரு இரவில் மோசமாகிவிட்டார் என்று அர்த்தமில்லை. ”

SYDNEY, AUSTRALIA – JANUARY 12: Ravindra Jadeja of India appeals successfully for the wicket of Usman Khawaja of Australia during game one of the One Day International series between Australia and India at Sydney Cricket Ground on January 12, 2019 in Sydney, Australia. (Photo by Matt King/Getty Images)

குல்தீப், சாஹல் இருவரும் விக்கெட் கீப்பர் பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்பது உண்மைதான் என்றாலும், ஜடேஜாவும் முன்னேற்றமடைந்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பெரோஸ்ஷா கோட்லாவில் புதன்கிழமை நடைபெற்றது. . சரியான நேரத்தில் ஜடேஜா, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைந்தார் என்பது தெளிவாகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.