இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. 6போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் – தவான் களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலே ரன் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் ரோகித் அவுட்டாகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இந்திய அணி 4ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. கோலி -தவான் விளையாடி வருகின்றனர். தென்னாப்ரிக்காவின் முடிவுக்கு முதல் ஓவரிலே பலன் கிடைத்துள்ளது.