இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது; வேதனைப்படும் சேன் வார்னே !!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது அதில் இன்று அடிலெய்டில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 233 அரண்கள் அடித்துள்ளது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 180 பந்துகளுக்கு 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்த்தினார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக ரன் அவுட் முறையில் அவுட்டானார். விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரின் ஜோடி இந்திய அணிக்காக 83 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் ரஹானேவின் தவறால் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார் என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, விராட் கோலி ரன் அவுட் முறையில் அவுட்டானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

விராட் கோலி இன்று சதம் அடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்

Mohamed:

This website uses cookies.