நியூசிலாந்து அணியை தோற்கடிக்க இவர்கள் மட்டுமே போதும்; கோஹ்லிக்கு டிப்ஸ் கொடுத்த முன்னாள் வீரர்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்த இரண்டு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் சாம்பியன்ஷிப் எனும் புதிய தொடரை உருவாக்கி அதில் 9 அணிகள் பங்கேற்றனர். அனைத்து போட்டிகளும் முடிவடைந்து இறுதிப்போட்டி வருகிற ஜூன் 18ஆம் தேதி துவங்கவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 12 போட்டிகள் வெற்றி என 72.2% வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. நியூசிலாந்து அணி 7 போட்டிகள் வெற்றி என 70% வெற்றியுடன் இரண்டாவது இடம் பிடித்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டி ஜூன் 18-22 வரை சவுத்தாம்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இதற்காக, இந்திய அணி ஜூன் 3ல் இங்கிலாந்து சென்றது. தற்போது 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

இதற்கிடையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

அவர் அளித்த பெட்டியில், “இங்கிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம், ஸ்பின்னர்களும் முக்கிய பங்குவகிப்பார்கள். 3 வேகப்பந்துவீச்சாளர்களும் 2 ஸ்பின்னர்களும் அணியில் இருக்க வேண்டும். ஸ்பின்னர்கள் வரிசையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா நல்ல பார்மில் இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

குறிப்பாக, நியூசிலாந்து அணி ஸ்பின் விளையாட சற்று திணறும். வேகப்பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ளும். இதை வைத்துப் பார்க்கையில், ஸ்பின்னர்கள் பங்கு முக்கியமாக தேவை என நான் உணர்கிறேன். கேப்டன் கோஹ்லி இதனை கருத்தில் கொள்ளவேண்டும்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.