கோலிதான் எனக்கு ஆக்ரோஷமாக ஆடக் கற்றுக்கொடுத்தார் : சகால்!!

Cricket - India v Australia - First One Day International Match - Chennai, India – September 17, 2017 – Yuzvendra Chahal, team's captain Virat Kohli and Mahendra Singh Dhoni of India celebrate the dismissal of Glenn Maxwell of Australia. REUTERS/Adnan Abidii

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டி பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சேஹல் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்க ஒரு நாள் போட்டித் தொடர் எனக்கு தனிப்பட்ட முறையில் சவாலான ஒன்று. இந்திய ஏ அணியில் விளையாடியபோது தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருக்கிறேன். ஆனால், அப்போது விளையாடியது கிளப் மைதானங்களில். சர்வதேச போட்டி நடைபெறும் மைதானங்களில் விளையாடவில்லை.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு பிட்ச்-களில் பந்து அதிமாக சுழலாது. தென்னாப்பிரிக்க பிட்ச் அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்பதால் எங்களுக்கு சவால்தான். டிவில்லியர்ஸுடன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி இருக்கிறேன். திறமையை மதிக்கிற வீரர் அவர்.

இந்தியா- இலங்கை டி20 போட்டி நடந்த போது, ஆட்டத்தைப் பார்த்துவிட்டு என்னை வாழ்த்தி மெசேஜ் அனுப்பியிருந்தார். காயம் காரணமாக இந்தப் போட்டியில் அவர் ஆடவில்லை.
என் நம்பிக்கையை வளர்த்தெடுத்தவர் விராத் கோலி. ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடியபோது, நான் கூச்ச சுபாவத்துடன் ஒதுங்கியே நிற்பேன். எதிரணி வீரர் ஏதாவது சொன்னால், நான் பதில் கூட சொல்ல மாட்டேன். அதை மாற்றியவர் கோலி. அவர்தான் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக ஆடக் கற்றுக்கொடுத்தார்’ என்றார்.

Editor:

This website uses cookies.