ஐசிசி தொடர்களில் மீண்டும் மீண்டும் தோல்வி! பதவியை ராஜினாமா செய்கிறார் கோலி? புதிய கேப்டன் யார்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான பைனல் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில்  இந்திய அணியின் பேட்டிங் ஆரம்பமாகும் போது தோல்வி அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியை இந்தியாவின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி மற்றும் ”துண்டு துக்கடா” வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து மலையைப் போல் நின்று வெற்றி பாதைக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.

ஆனால் வெற்றியை நெருங்கும் முடியவில்லை என்பதே இங்கு சோகமான செய்தி. மீண்டும் உலகின் மிகச்சிறந்த ‘ரன்னர்’ மகேந்திர சிங் தோனி ‘ரன் அவுட்டாகி’ தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இது ஒருபக்கம் ரசிகர்களின் மனதில் ஆறாத துயரமாக ஓடிக்கொண்டிருக்க, தற்போது விராட் கோலியின் ரசிகர்களுக்கு பேரிடியாய் ஒரு செய்தி வந்து இறங்க உள்ளதாக தெரிகிறது.

ஆம் விராட் கோலி இந்த ஐசிசி உலக கோப்பை தொடரில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும் இதுகுறித்த அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து இதே பாணியில் இறுதிப் போட்டியில் கோப்பையை இழந்தது இந்திய அணி. அதுவும் பாகிஸ்தானிடம். இதில் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி.

தற்போது 2019ம் கோப்பையை வெல்லும் என்று நினைத்த இந்திய அணி, நியூசிலாந்திடம் செமி ஃபைனலில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியில் எந்த குறையும் இல்லை. நம்பர் ஒன் பேட்ஸ்மேன், உலகின் இரண்டாம் தர நிலை பேட்ஸ்மேன் ரோஹித், உலகின் முதல் தர நிலை பந்துவீச்சாளர் பும்ரா, உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி, மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் இந்திய அணியில் உள்ளன.

இப்படி ஒரு நட்சத்திர பட்டாளம் கொண்ட அணியை பெரிதாக எந்த வீரரும் இல்லாத நியூசிலாந்து அணி வீழ்த்தி இருக்கிறது என்றால் எங்கு பிரச்சனை என்று பல கேள்விகள் எழுகிறது. குறிப்பாக விராட் கோலியின் கேப்டன்சியில் முக்கியம் கேள்வி வந்துள்ளது.

மேலும் சர்வதேச அளவில் பல கோப்பைகளை வென்றாலும் ஐசிசி தொடர் என்று வரும்போது விராட் கோலி கோட்டை விட்டு விடுகிறார். இவருக்கு மாற்றாக ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கலாம் என கடந்த சில வருடங்களாக பேச்சுக்கு நிலவி வருகிறது. ஏனெனில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் கேப்டனாக இருந்து மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியை கோப்பையை வெல்ல வைத்துள்ளார். இதன் காரணமாக சமூகவலைதளத்தில் ரசிகர்கள் விராட் கோலிக்கு பதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ரோகித் சர்மாவை கேப்டன் ஆகலாம் எனவும் பேசி வருகின்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.