டி.20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கு கண்டிப்பா இடம் கிடைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !!

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 3வது பேட்டிங் லைன் அப்பாக விராட் கோலியை தான் விளையாட வைக்க வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை தொடர் நெருங்க நெருங்க உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்பும் ஒவ்வொரு அணியிலும் அரங்கேறிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு அணியும், பல்வேறு விதமான தொடர்களில் தங்களது வீரர்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயல்படும் வீரர்களை கவனித்து வருகின்றனர்.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகளில் திறமையான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எந்த வீரரை அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை நீக்கலாம் என்று அணித் தேர்வாளர்கள் பெருத்த சந்தேகத்தில் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியில் டாப் ஆர்டர் வரிசை,மூன்றாவது பேட்டிங் லைன் அப் மற்றும் சுழற் பந்துவீச்சாளரக யாரை தேர்ந்தெடுப்பது, மற்றும் காயமான வீரர்களுக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி போன்ற குழப்பமெல்லாம் தேர்வு குழுவில் நிலவி வருகிறது.

இதனால் தேர்வு குழுவில் இருக்கும் நபர்கள் சிந்திக்கும் வகையில் தெளிவான யோசனைகளையும் அறிவுரைகளையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், விராட் கோலியை எப்பொழுதும் போல 3வது பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசுகையில்,“விராட் கோலி அவருடைய ஒரிஜினல் இடமான 3வது பேட்டிங்கில் விளையாட வைக்க வேண்டும், கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரராக செயல்பட வேண்டும், மற்ற வீரர்களான ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் தேவைக்கேற்றவாறு விளையாட வைத்துக் கொள்ளலாம். இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆக்ரோசமாக செய்து வருகிறது நிச்சயம் இந்த முறை உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாஷிங் ஜாபர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.