உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அறிமுகமாகும் புதிய வகை பந்து ! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
வரும் 2020ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்த, கிரிக்கெட் பந்து தயாரிக்கும் நிறுவனமான குக்கபுர நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரும் 2020ல் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நட் க்கவுள்ளது. இதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிரபல பந்து தயாரிக்கும் நிறுவனமான குக்கபுர நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்துவது போல கடினமான பந்தை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த பந்துக்கு ’டிரெப்-20’ என பெயர் வைத்துள்ளது. இந்த பந்து தற்போது பார்வையற்றவர்களின் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் கிரிக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து குக்கபுரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கில் கூறுகயில்‘ தற்போது டி-20 கிரிக்கெட் அதிகரித்து வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என பாரம்பரிய பந்து தயாரிப்பது நடைமுறையில் உள்ளது போல டி-20 போட்டிக்கும் வேண்டும் என எங்கள் நிறுவனம் நினைத்தது.
அதே நேரம் 80 ஓவர்கள் நீடிப்பது போன்ற அளவுக்கு கடினமாகவும் அந்த பந்து இருக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். தற்போது சில பகுதிகளில் இந்த பந்தின் மாதிரிகளை சோதித்தபோது தற்போது பயன்படுத்தப்படும் பந்துக்கும், ‘டிரெப்-20’ பந்துக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. ஆனால் முழு 20 ஓவர்களுமே பந்து கடினமாக இருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.’ என்றார்.