கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் கர்நாடகா பிரீமியர் லீக் டி20 தொடரின் ஆறாம் பதிப்பு வரும் செப்டம்பர் மாதம் தேதி தொடங்கவுள்ளது.
KPL ஒரு பார்வை :
ஐ.பி.எல். போலவே 8 அணிகள், ஐ.பி.எல். போலவே தனியார் உரிமைதாரர்கள் அதே பாணியில் அனைத்தும் என்ற வகையில் இறங்கியுள்ளது கர்நாடகா கிரிக்கெட் சங்கம். அதாவது மாவட்ட அளவில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவில் வளர்ச்சி பெறுவதற்காக இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் ஆறாவது பதிப்பான இந்த வருடத்திலும் 8 அணிகளுடன் களம் காண்கிறது. மங்களூர் யுனைடெட்ஸ் அதிக முறை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
அணிகளின் விவரம் வருமாறு :
- பெல்காவி பேன்த்தர்ஸ்
- பிஜப்பூர் புல்ஸ்
- பெல்லாரி டஸ்கர்ஸ்
- ஹூப்ளி டைகர்ஸ்
- மைசூர் வாரியர்ஸ்
- நம்ம சிவமொக்கா
- கல்யாணி ப்ளாஸ்டர்ஸ்
- மங்களூர் யுனைடெட்ஸ்
இந்த ஏழு அணிகளும் கோப்பையை கைப்பற்றிய முனைப்புடன் வரும் செப்டம்பர் மாதம் களம் இறங்கி பந்தாடும்.
ஆரம்ப கட்டத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான இத்தொடர், தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்று இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது.
இந்த கே.பி.எல். கிரிக்கெட் என்ற யோசனையையே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான அனில் கும்ளே கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது . “கே.பி.எல். என்றால் என்ன? இதுபோன்ற ஒன்றை துவங்கியிருப்பதன் முழு நோக்கம் என்ன? அப்படி துவங்குவதென்றால் கர்நாடகா கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ. ஒதுக்கும் தொகையிலிருந்தே நடத்தலாமே? ஏன் தனியார் உரிமையாளர்களை அழைக்க வேண்டும்? என்று தொடர் கேள்விகளை எழுப்பினார் அப்போது .
இதேபோல் கிரிக்கெட்டில் பிரதானமாக இயங்கும் மற்ற மாநிலங்களும் பிரீமியர் லீக் கிரிக்கெட்டை துவங்கினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க முடியவில்லை. அரசியல்வாதிகளும், பணம் கொழிக்கும் தாதாக்களும் இதனை எடுத்து நடத்தினால் வீரர்களின் நிலை என்ன? கிரிக்கெட்டின் நிலை என்ன?இதுபோன்ற ஒரு கிரிக்கெட் தொடர் எப்படி நடத்தப்பட முடியும்? இதற்கான விதிமுறைகள் உள்ளனவா? உண்மையில் கிரிக்கெட்டிற்கு இது நல்லதா? வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்லதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் எதிர்மறையானதாகவே இருக்கும்.உடனே இந்த அபாயப் போக்கை பி.சி.சி.ஐ. தடுத்து நிறுத்த வேண்டும். கிரிக்கெட் திறன்களை ஒரு நாளும் இதுபோன்ற முறையில் வளர்த்தெடுக்க முடியாது.
என பல்வேறு விமானங்களை வைத்தனர் விமர்சகர்கள். ஆனாலும் தற்போது KPL 6 வது பதிப்பை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
இந்த தொடரில்,வினய் குமார், கேஎல் ராகுல், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, கருன் நாயர் , ஸ்டூவர்ட் பின்னி,போன்ற இந்திய வீரர்களும் ஐபிஎல் தொடரில் பெயர் பெற்ற பல வீரர்கள் ௵நாத் அரவிந்த், கே சி கரியப்பா, ரோனிட் மோர் , ஜதீஸ் சுசித்,சஷாஙக் பாவ்னே, பலரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கே.சி. கரியப்பாவை ரூ.2 கோடியை 40 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்து போது அவர் ஒரு முதல் தர போட்டிகள் மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகள் எதிலும் விளையாடாத கரியப்பா ரூ.2.40 கோடிக்கு ஏலம் போனதும் ஒரு சில நிமிடங்களிலேயே நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுபவராக மாறிவிட்டார். கர்நாடகா பிரீமியர் லீக் டி20 போட்டிகளில் பிஜப்பூர் புல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், அந்தப்போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தமிழக பிரீமியர் லீக் போல விளம்பரம் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றுள்ளது கர்நாடக பிரீமியர் லீக். அந்த மாநிலத்தில் உள்ள 3 மைதானங்களில் அனைத்து 37 போட்டிகள் நடக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.