இந்த விசயத்தில் கங்குலியை விட தோனி தான் மாஸ் கேப்டன்; ஸ்ரீகாந்த் ஓபன் டாக் !!

இந்த விசயத்தில் கங்குலியை விட தோனி தான் மாஸ் கேப்டன்; ஸ்ரீகாந்த் ஓபன் டாக்

சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை கையாளுவதில் கங்குலியை விட தோனியே சிறந்த கேப்டன் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய கிரிக்கெட் கலெக்டட் என்னும் நிகழ்ச்சியில் கவுதம் காம்பீர், சங்ககாரா மற்றும் கிரீம் ஸ்மித் ஆகியோருடன் இந்தியாவின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் சிறந்த கேப்டன் யார் என்ற விவாதம் நடைபெற்றது அதில் கங்குலியா.? தோனியா.? என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கங்குலி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனும் ஆவார் இவர் எதிரி அணியின் சொந்த நாட்டிலேயே சென்று பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். இந்திய அணியின் மனநிலையை வழு படுத்தியவர். இருந்தபோதும் தோனி கேப்டனாகவும் கீப்பராக பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டார். 2007 முதல் இந்திய அணியை தலைமை வகித்த M.S தோனி இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ளார்.இந்திய கேப்டனாக பல வெற்றிகளை குவித்த வீரர் என்ற சரித்திரம் படைத்தார். ஐசிசி ஆல் நடத்தப்பட்ட அனைத்து விதமான போட்டிகளின் வெற்றிக் கோப்பைகளை பெற்று தந்தவர்.

தோனியின் சாதனைகள்;

2007-இல் நடந்த T-20 உலக கோப்பை தொடரை வெற்றி பெற்றார், 2011 இல் இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை வெற்றி பெற்று கொடுத்தார், மேலும் 2013 இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்தார். இந்திய அணிக்காக தலைமை ஏற்று 100க்கும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் இவரும் ஒருவர். எனவே என்னைப்பொறுத்தவரையில் கங்குலியை விட தோனியை மிகச் சிறந்த கேப்டன் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறினார்

Mohamed:

This website uses cookies.