மைசூர் கேப்டன் சுப்பாராவ் கிருஷ்ணமூர்த்தி மரணம். இந்தியாவில் கிரிக்கெட் துவங்கிய காலத்தில் மைசூரு மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியவர் சூப்பாராவ். மேலும், மைசூரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர் ஆவார் சுப்பாராவ். இவர் அங்கு படித்த காலத்தில் அகில இந்திய பல்கலைக்கழக தொடரில் நமக்கு வருடம் மைசூரு மருத்துவ பல்கலைக்கழக அணிக்கு கேப்டனாக இருந்தார். மேலும் இரு முறை அகில இந்திய பல்கலைக்கழக தொடராக ரோகிண்டன் பாரியா கோப்பையை 1962ல் வெற்றி பெற்று உள்ளார்.
மேலும், தனது முதல் தரப் போட்டியில் 1958அம் ஆண்டு மார்ச் மாதம் சிலோன் லெவன் அணிக்கு எதிராக களம் இறங்கினார். அதே போல் ரஞ்சிக் கோப்பை தொடர்களில் 1959ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமானார். மொத்தம் 32 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளார் சுப்பாராவ். அதில், 27.26 சராசரியில் மொத்தம் 1336 ரன்களை குவித்துள்ளார்.
விக்கெட் கேப்பார் பேட்ஸ்மேனான இவர் முதல் தரப் போட்டிகலில் 39 கேட்ச் மற்றும் 15 ஸ்டம்பிங் செய்துள்ளார். முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷனின் துணைத் தலைவராகவும், கர்நாடக அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்போது இந்த உலகைவிட்டு பிரிந்த அவரது ஆன்மா சாந்தி அடைய பிராதிப்போம்