கர்நாடகா அணியை சேர்ந்த கிருஷ்ணப்ப கெளதம் இந்திய அணியின் ஜெயந்த் யதாவிற்கு பதிலாக இந்தியா ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார். ஜெயந்த் யதாவ் சில காரணத்தால் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார் இதனால் அந்த இடத்தை கர்நாடகா அணியை சேர்ந்த கிருஷ்ணப்ப கெளதம் பிடித்து உள்ளார்.
கர்நாடகா அணியை சேர்ந்த கிருஷ்ணப்ப கெளதம் மிகவும் திறமையான வீரர் இவர் ரஞ்சி ட்ரோபி போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று உள்ளார்.
கிருஷ்ணப்ப கெளதம் ரஞ்சி ட்ரோபி போட்டிகளில் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் அடித்து உள்ளார் அது மட்டும் இல்லாமல் 27 விக்கெட்களையும் ரஞ்சி ட்ரோபி தொடரில் கைப்பற்றியுள்ளார்.
இவர் சிறப்பாக விளையாடியதால் நடந்து முடிந்த ஐபிஎல் 2017 போட்டியில் 2 கோடிக்கு மும்பை அணியில் இடம் பிடித்து இருந்தார். இவர் 2017 ஐபிஎல் போட்டியில் தன் திறமையை சிறப்பாக வெளி படுத்துவர் என்று எதிர் பார்க்க பட்டது ஆனால் ஐபிஎல் இல் ஒரு போட்டியில் கூட விளையாட கிருஷ்ணப்ப கெளதமிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த போட்டியில் இவர் தன் திறமையை அனைவருக்கும் வெளிப்படுத்தி காட்டுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.
தற்போது இந்தியா ஏ அணி தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாட மிகவும் மும்முரமாக தயாராகி கொண்டு இருக்கிறது, ஆகஸ்ட் 8இல் இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்கா ஏ அணி :
ஐடின் மார்கரம், ஸ்டீபன் குக், ஜூனியர் டல, ஹென்ரிக்ஸ்,க்ளாஸென், டேவிட் மில்லர், ஒலிவேர்,டேன் பேட்டர்சன், ராமேல, ரூடி செகண்ட், ஸ்மித், காயா.
இந்தியா ஏ அணி :
கருண் நாயர், இஷான் கிஷன், பஞ்சால், சமர்த், ஸ்ட்ரெஸ் ஐயர், அன்கிட், சுதீப், ஹனுமா விஹாரி, கிருஷ்ணப்ப கெளதம், நதீம், சைனி, முகமத் சிராஜ், தாகூர், அன்கிட் சோளத்தரி, அன்கிட் ராஜ்கபூர்.