விராட் கோஹ்லி தனது வாழ்க்கையில் ஒரு கோப்பை கூட வெல்ல முடியாது, இலங்கை உடன் இந்தியா தோல்வியுற்ற பிறகு கே.ஆர்.கே கூறுகிறார்.
நேற்று நடந்த சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா மோதியது, இதில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 321 ரன்கள் அடித்தது அதில் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்த ரோஹித் ஷர்மா மற்றும் தவான் 138 ஜோடி சேர்ந்து அடித்தார்கள், இந்திய அணியின் அதிக பட்சமாக ரோஹித் சர்மா 78 ரன்களும் தவான் 125 ரன்களும் அடித்தார்கள் பிறகு களம் இறங்கிய விராட் கோஹ்லி 0 ரன்களுடன் வெளியேறினார்.
தோனி சிறப்பாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார் இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்து, அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரீலங்கா அணி சிறப்பாக விளையாடி வந்தது அதில் தனுஷ்கா குலத்திலாக 76 ரன்களும் குஷால் மெண்டிஸ் 89 ரன்களும் அடித்தார்கள் பிறகு வந்த குஷால் பிரேர 47 ரன்கள் அடித்தார் கேப்டன் மெதிவ்ஸ் 52 ரன்களும் அடித்தனர். இதனால் இந்திய அணியை ஸ்ரீலங்கா 48.4 ஒவேர்களிலேயே வீழ்த்தியது.
இந்தியா தோல்வி அடைந்த பிறகு இதை பற்றி பாலிவுட் நடிகர் காமால் ரஷீத் கான் கோஹ்லியை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார்
தனது அடுத்த போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி ஞாயிற்று கிழமை மொத உள்ளது இதில் வெற்றி பெரும் அணி அரையிறுதியில் விளையாடும் தோல்வி அடைந்த அணி சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் இருந்து வெளியேறும்