2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே எனது இலக்கு; க்ரூணல் பாண்டியா !!

2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே எனது இலக்கு; க்ரூணல் பாண்டியா

அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே தனது இலக்கு என்று க்ரூணல் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா, இவரது அண்ணன் குருணால் பாண்டியா. இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது பிரபலம் ஆனார்கள்.

ஹர்திக் பாண்டியா சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். ஆனால் குருணால் பாண்டியாவிற்கு இன்னும் இடம்கிடைக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் சிறப்பாக பேட்டிங்கும் செய்து வருகிறார்.

இதனால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே உச்சக்கட்ட இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

Krunal Pandya is yet to make his international debut, but that’s not stopping him from dreaming about a spot in the Indian squad that will fly to England next year for the 2019 World Cup.

இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘என்னுடைய உச்சக்கட்ட இலக்கே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். நான் ஒவ்வொரு தொடராக சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மேட்ச் ஒன்று கூட சொல்லலாம். நான் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். நான் என்ன விரும்புகிறனோ, அதை பெறுவேன்.

இறுதியாக அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். தற்போது நான் சென்று கொண்டிருக்கும் வழியில், நான் அந்த உயரத்தை எட்டுவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.