குல்தீப் – சஹால் இருவரும் அணிக்கு முக்கிய பங்காற்றுவர்: விராட் கோலி

India's Kuldeep Yadav (R), Yuzvendra Chahal (front L) and wicketkeeper Mahendra Singh Dhoni (C) celebrate after New Zealand's Lockie Ferguson was stumped during the first one-day international (ODI) cricket match between New Zealand and India at McLean Park in Napier on January 23, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

உலககோப்பை தொடரில் குல்தீப் மற்றும் சஹால் ஆகிய இருவரும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் டோனி. முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.

டெத் ஓவர்களில் எல்லை கோட்டில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும்.

30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லை கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று டோனிக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.

ஆரம்ப கட்டத்தில் எனக்கு டோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். டோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.

இவ்வாறு கோலி கூறினார்.

இந்திய உலகக்கோப்பை அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப தற்போது இந்திய உலகக்கோப்பை அணியின் ஸ்டாண்ட்பை வீரர்களாக ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோர் இங்கிலாந்து செல்கின்றனர்.

விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு தேர்வுக்குழு தலைவர் பிரசாத், விஜய் சங்கர் ஒரு 3டி பிளேயர் என்றார் அதனை கிண்டல் செய்யும் விதமாக உலகக்கோப்பை போட்டிகளைப் பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன் என்று ராயுடு கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரிஜினல் அணியில் யாராவது வீரர் காயத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ உலகக்கோப்பையிலிருந்து விலக நேரிட்டால் இந்த ஸ்டாண்ட்பை வீரர்களை அழைத்துக் கொள்ளலாம்.

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு 3 ஸ்டாண்ட்பை வீரர்களைத் தேர்வு செய்தது போல் தற்போது, ராயுடு, ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகிய 3 வீரர்கள் 2019 உலகக்கோப்பை இந்திய அணியின் ஸ்டாண்ட்பை வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷப் பந்த் அணியில் இடம்பெறாதது ‘ஆச்சரியம்’ என்று சுனில் கவாஸ்கர் தெரிவிக்க, கவுதம் கம்பீர், ஒரு படி மேலே போய் 2007 உலகக்கோப்பையில் தனக்கு ஏற்பட்ட கதி ராயுடுவுக்கு ஏற்பட்டதாக வருந்தினார்.

ஆவேஷ் கான், கலீல் அகமெட், தீபக் சாஹர் ஆகியோர் இந்திய அணியின் வலைபவுலர்களாக இங்கிலாந்து செல்கின்றனர்.

ஜூன் 5ம் தேதி சவுத்தாம்ப்டனில் இந்திய அணி தன் முதல் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

Sathish Kumar:

This website uses cookies.