தோனி எல்லாம் சமாளிச்சிருலாம். இவங்க ரெண்டு பேருக்கு பந்துவீசுறது தான் கஷ்டம் ! குல்தீப் யாதவ் ஓப்பன்டாக்

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 13 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருக்கிறது.

இந்நிலையில், இயான் மோர்கன் தலைமையில் செய்லபட்டு வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் இந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இன்று கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 15வது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு பேட்ஸ்மன்களுக்கு பந்துவீசுவது தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.

குல்தீப் யாதவ் கூறுகையில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மன் ஏபிடி டீவில்லியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, இவர்களுக்கு பந்துவீசுவது தான் கஷ்டமாக இருக்கும்.

டீவில்லியர்ஸ் பந்தை மைதானத்தின் எல்லா மூலையிலும் தெறிக்கவிடுவார். அதே நேரத்தில் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சிறிது நேரம் தேவைப்படும்” என்று கூறியுள்ளர்.

Prabhu Soundar:

This website uses cookies.