உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு கள நடுவர்களாக, குமார் தர்மசேனா, எரஸ்மஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன் னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
இந்தப் போட்டிக்கு நடுவராகச் செயல்படுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரே லியா போட்டியின்போது நடுவர்களாக செயல்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் எரஸ்மஸ் ஆகியோர் கள நடுவர்களாக செயல்படுவார்கள். போட்டியின் மூன்றாவது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதிப் போட்டியில் ஜேசன் ராய்க்கு தவறான அவுட் கொடுத்து குமார் தர்ம சேனா சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
குமார் தர்மசேனா
மராய் எரஸ்மஸ்
ராட் டக்கர்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று பர்மிங்காமில் நடந்த 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக ஸ்மித் 85 ரன் எடுத்தார். அலெக்ஸ் கேரி 46 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னும், மேக்ஸ்வெல் 22 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ரஷித் தலா 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் ஜேசன் ராய் 85 ரன்னும், ஜோ ரூட் 49 ரன்னும், கேப்டன் மோர்கன் 45 ரன்னும் எடுத்தனர்.
1992-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது:-
இந்த வெற்றி முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம்ப முடியாத அளவுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
எட்ஜ்பாஸ்டன் மைதானம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தினோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த நம்பிக்கையுடனும், லீக் ஆட்டங்களில் கிடைத்த உத்வேகத்துடனும் இங்கு வந்து விளையாடினோம்.
முன்னேற்றத்தில் இருந்து முன்னேற்றம் அடைவது பற்றி பேசினோம். முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தோம்.இறுதிப் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறினோம். அதில் இருந்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். இது வியத்தகு முன்னேற்றம் ஆகும்.
டிரஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் கடின உழைப்பில் பஙகு உள்ளது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற பல வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.