நீ செய்யவேண்டியது எல்லாம் இது மட்டும் தான் ; சஞ்சு சாம்சனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த குமார் சங்ககாரா..
ஐபிஎல் தொடரில் விளையாடுவது போன்று இந்திய அணிக்காக விளையாட முடியாது என சஞ்சு சாம்சனுக்கு குமார் சங்ககாரா அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத டி.20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த டி.20 தொடரில் அனைவரும் எதிர்பார்த்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். இதனால் சஞ்சு சம்சனுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சஞ்சு சம்சனுக்கு தகுந்த ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமை தாங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டைரக்டர்மான குமார் சங்ககாரா சஞ்சு சாம்சனுக்கு தன்னுடைய அறிவுரையை கொடுத்துள்ளார்.
அதில்,“அவர் வேறு எதுவும் பெரிதாக செய்ய தேவை இல்லை, தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தினாலே போதும், இது மிகவும் எளிதானது. ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது வேறு.. இந்தியா அணிக்கு விளையாடுவது என்பது வேறு.. மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் முதலில் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் மேலும் எந்த மாதிரி நாம் செயல்பட போகிறோம் என்ற தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும்” இதை செய்தாலே சஞ்சு சாம்சன் வெற்றிகர வீரராக திகழ்வார் என குமார் சங்ககாரா அறிவுரை கொடுத்துள்ளார்.
என்னதான் சஞ்சு சாம்சனுக்கு பலரும் அறிவுரை கொடுத்தாலும் அவர் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத கேள்வியாக இடம்பெற்றுள்ளது.