இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கரை சேர்க்க போவதே இந்த இரண்டு வீரர்கள் தான்; சங்ககாரா உறுதி !!

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டனான கே.எல் ராகுல் 91 ரன்களும், அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 ரன்களும், கிரிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 221 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேட்டன் சக்காரியா 3 விக்கெட்டுகளையும், கிரிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மோகன் வாகரா சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர் அதனை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் மட்டும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டு எடுத்தனர் இதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார் 2021 ஐபிஎல் தொடரில் முதல் சதமாகும்.மிகவும் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சால் அந்த வெற்றி 4 ரன்களில் பறிபோனது.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நெருக்கடியான நிலைமை எப்பொழுதுமே இருக்கும் ஆனால் அதை மறக்க முயற்சி செய்யவேண்டும் சஞ்சு சாம்சன் மற்றும் மற்ற அனைத்து வீரர்களிடம் நீங்கள் இதனை காண்பீர்கள். மேலும் அதுபோன்ற இக்கட்டான நிலைகளை சமாளிப்பதற்கு தனி யுக்தி உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிவாடியா பற்றி கூறியதாவது இவர்கள் இருவரும் மிக சிறந்த வீரர்கள். சர்வதேச போட்டிகளில் இவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள் இவர்களுக்கு கிரிக்கெட் அறிவு அதிகம் உள்ளது, மேலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும் மேலும் இந்திய அணியில் இளம் பேட்டிங் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் தனது லட்சியத்தை போட்டியில் மிக சிறப்பாக செய்யக்கூடியதில் வல்லவர் மேலும் ராகுல் டிவாடிய மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் நம்புகிறது.

Mohamed:

This website uses cookies.