ஸ்மிரிதி மந்தனாவின் பேட்டிங் பற்றி சங்ககாரா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது பேட்டிங் முன்மாதிரி முன்னாள் இலங்கை கேப்டனான குமார சங்ககாரா என் தெரிவித்திருந்தார். மந்தனாவும் இடது கை ஆட்டக்காரர் ஆவார். பலரும் அவர் ஆடிய தொணி சௌரவ் கங்குலியை போல் உள்ளது என பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.

 

தொடக்க ஆட்டக்கரரான இவர்,அதிரடியால் அனைவரையும் கவந்தார்.

“நான் பேட்டிங் ஆடும் போது நான் என்னை போல் ஆட எப்போதும் முற்ப்படுவதில்லை, நான் சங்ககாரவின் வீடியோக்களை பார்த்து அதற்க்கேற்றார் போல் எனது ஸ்ட்ரோக்குக்ளை மாற்றி கொள்வேன்” – ஸ்மிரிதி

மும்பையைச் சேர்ந்த 20 வயதான ஸ்மிருதி மந்தனா தன்னுடைய 16-வது வயதில் 2013-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு ஏதிராக தனது முதல் ஒரு நாள் போட்டியை சந்தித்திருக்கிறார்.

இதுவரை 25 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 897 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரு சதங்களும், ஆறு அரை சதங்களும் அடங்கும்.

 

இந்திய அணி சமீபத்தில் நடந்த உலககோப்பையில் இறுதி போட்டி வரை சென்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு ஸ்மிரிதியும் பெரும் பங்கு வகுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

TAUNTON, ENGLAND – JUNE 29: India batsman Smriti Mandhana celebrates her century with Mona Meshram during the ICC Women’s World Cup 2017 match between West Indies and India at The County Ground on June 29, 2017 in Taunton, England. (Photo by Stu Forster/Getty Images)

20 வயதே ஆன இவர் , உலக கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலந்திற்க்கு எதிராக தனது அதிரடியால் 72 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். அதில் அவரது பல ஷாட்கள் சவுரவ் கங்குலியை போலவே இருந்தது. அவை , பார்ப்பதற்க்கு கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

அடுத்த லீக் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதம் (106) விளாசினார். அதனால் இந்திய அணி 182 ரன்களை எளிதாக சேர்த்தது. மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் மேற்உ இந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. தொடக்க ஆட்டக்கார் ஆன ஸ்மிரிதி இறுதி போட்டியில் சோபிக்க தவறினார். அதே வேளையில் இந்தியா இறுதி போட்டியில் தோழ்வியையும் தழுவியது.

 

” நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் பேட்டிங்கை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே எனகு பழகிவிட்டது, கங்குலி ஆடும் கால கட்டத்தில் நான் மிகவும் சிறு பெண் அப்போது அவருடைய வீடியோக்களை அவ்வளவாக நான் பார்த்தது இல்லை. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சிறு வயதில் நான் என்னுடைய அண்ணனின் பேட்டிங் பாணியை காப்பி அடித்தி கற்று கொண்டேன். ஆனால் சங்ககாரவை பார்த்து ஆடுவது எனக்குள் ஒரு தெளிவு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அவரிடம் இருந்து நான் என்னை மேம்படுத்தி கொள்கிறேன்.

 

சங்காவின் பதில் :

ஸிமிரிதி போன்ற மிக திறமை வாய்ந்த ஒரு இளம் வீரர் என்னை பற்றி பேசியது எனக்கு பெருமையே ஆகும்.

அவரை போன்ற ஒருவர் என்னை முன்னுதாரமாக எடுத்து விளையாடி வருவது என்னை மேலும் பாக்யம் செய்தவராக மாற்றும்.

இதற்கு மந்தனா கூறியதாவது : அவருக்கு நன்றி தெரிவிக்க நான் கடமை பட்டிருக்கின்றேன், என் பேட்டி அளித்தார்.

மந்தனாவை போன்ற ஒரு இளம் வீராங்கணை, சங்காவை போன்ற சிரந்த பேட்ஸ்மேனிடம் இருந்து கற்றுக்கொள்வது நல்ல ஆரோக்யமான ஒன்றாகும். இது போன்ற ஆரோகமான பழக்க வழக்கங்களை ஸ்மிரிதி மந்தனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அது போக ஆஸ்திரேலியாவிள் நடக்கும் பெண்களுக்கான பிக் பாஷ் ட்20 தொடரிலும் ஸ்மிரிதி மந்தனா பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளைஆடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உலக கோப்பையை நழுவ விட்டாலும், தற்போதைய அணியில் உள்ள வீராங்கணைகளில் ஏறக்குறைய அனைவரும் இளம் வீராங்கணைகளே, அவர்களுக்கான அங்கீகாரமும், ஊக்கமும் நாம் கொடுக்கும் பட்சத்தில் அவர்களுடைய இந்த உலககோப்பை அனுபவம் எதிர் காலத்தில் இந்தியவிற்க்கு பல உலக கோப்பைகளை பெற்று தரும் என் நம்புவோம்.

Editor:

This website uses cookies.