சிஎஸ்கே ஜெயிச்ச மேட்ச்ல கூட இவ்ளோ சந்தோசமா தூங்க போகல…தல தல தான்..!!! தோனியை கொண்டாடும் ட்விட்டர் உலகம்!!

பின்னர் வந்த கேப்டன் தோனி, பொறுமையாக ஆடினார். அதே நேரம் நல்ல பந்துகளை விளாசவும் செய்தார். இந்த நேரத்தில் ராயுடு ரன் அவுட் ஆக, சிஎஸ்கேவின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்து வந்த ஜடேஜா, ரன் எடுக்கத் தடுமாற, தேவை யான ரன் ரேட்டும் ரசிகர்களின் டென்ஷனும் ஏறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் ஒத்தையில போராடினார் தோனி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வியுற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். கிறிஸ் கெயில் நீண்ட நாளைக்குப் பிறகு இன்று அணியில் சேர்க்கப்பட்டு களத்தில் இறங்கினார். இருவரும் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக விளையாட துவங்கினர். ஒருபுறம் கே.எல்.ராகுல் கிளாஸ் ஷாட்டுகளை ஆட மறுபுறம் கிறிஸ் கெயில் பந்தை பறக்கவிட்டார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தனர். இருப்பினும் ராகுல் 22 பந்தில் 37 ரன்களுடன் ஹர்பஜன் சிங் பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 22 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் 33 பந்துகளில் 63 ரன்கள் அடித்து வாட்சன் பந்தில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு வந்தவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும் முரளி விஜயும் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு வந்த பில்லிங்ஸும் 9 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதன்பிறகு அம்பட்டி ராயுடுவும் தோனியும் நிதானமாக விளையாட தொடங்கினர்.

நிதானமாக விளையாடிய அம்பட்டி ராயுடு 49 ரன்களில் துரதிஷ்டவசமாக எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். கடைசி வரை போராடிய கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Editor:

This website uses cookies.