’பாகிஸ்தானில் பாதுகாப்பு விஷயங்களும் சுதந்திரம் இல்லாததும் எனக்கு விரக்தியை தந்தன’ என்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துவந்தார். உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி அளித்தது குறித்து, பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கூறும்போது, ‘’பாகிஸ்தானில் எனக்கு அதிக வெறுப்பை ஏற்படுத்திய விஷயம், பாதுகாப்பு விஷயங்களும் பணி சுதந்திரம் இல்லாததும் தான். என் பணி காலத்தில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. இந்தியாவை ஓவலில் தோற் கடித்திருக்கிறது. நான் பயிற்சி அளித்ததில் மிகச் சிறந்த வீரராக பாபர் ஆஸமை சொல்வேன். அவர் அருமையான பேட்ஸ் மேன். சிறந்த பாகிஸ்தானி.
அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்களாக இருக்கிறார்கள். அதிகமான அரசியல் அங்கு இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கூட அதிக அரசியல் இருக்கிறது. அந்த அணி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த் துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் பின்னால் நில்லுங்கள். நேர்மறையான சிந்தனையோடு செயல்படுங்கள்’’ எ
டிவி சேனல்களில் ஏகப்பட்ட அரசியல், பத்திரிகையாளர்கள் மற்றும் பாகிஸ்தான் வாரியத்தில் உள்ளவர்கள் என்று ஏகப்பட்ட அரசியல், நிச்சயம் அங்கிருந்து வந்ததில் இதில் எனக்கு பெரிய நிம்மதிதான்.
என் பயிற்சியில், நான் பயிற்சியளித்ததில் சிறந்த வீரர் பாபர் ஆஸம், ஹாரிஸ் சோஹைல் திறமைக்கும் கீழே ஆடுகிறார், அவரது சிறந்த ஆட்டத்தை இன்னமும் அவர் வெளிப்படுத்தவில்லை.” என்றார் கிராண்ட் பிளவர்.
மேலும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தார் கிராண்ட் பிளவர்.
ன்று தெரிவித்துள்ளார்.