ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக ராஜ்புட் நியமனம் !!

ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக ராஜ்புட் நியமனம்

ஜிம்பாப்வேவின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இதனால் ஜிம்பாப்வே அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் உள்பட பலர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதன் பின் ஜிம்பாப்வே அணியின் தலைமை இடைக்கால் பயிற்சியாளராக் லால்சந்த் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது பதவியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உறுதிபட இன்று அறிவித்துள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், “ஜிம்பாப்வேவின் சீனியர் ஆடவர் அணிக்கு நிலையான தலைமை பயிற்சியாளராக ராஜ்புட்டை நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுடன் ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு தொடரை ராஜ்புட் மேற்பார்வையிட்டார்.

ராஜ்புட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

செப்டம்பர் – நவம்பரில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்க இருக்கும் டெஸ்ட் தொடர் தான் தலைமை பயிற்சியாளராக ராஜ்புட் எதிர்கொள்ள இருக்கும் முதல் பணியாகும்.

ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காள தேசம் சென்று விளையாட இருக்கிறது.

Mohamed:

This website uses cookies.