ஆஸ்திரேலியா அணியின் பயிர்ச்சியாளர் ஜஸ்டின் லங்கர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் ஆக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் மூன்று அணிகளும் பங்கேற்ற முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதி, பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.
ஆஸ்திரேலியா சார்பில், அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தொடரில் சிறப்பாக ஆடினார். மேலும், இறுதி போட்டி வரை அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
பின்ச் அபார ஆட்டம்
5 போட்டிகள் ஆடிய பின்ச் 5 இன்னிங்சில் 306 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் ஒரு அரைசதமும் அடங்கும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பின்ச் 172 ரன்கள் அடித்து, டி20 போட்டியில் தனிநபருக்கான அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
இறுதி போட்டியாக தொடரை இழந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் பயிர்ச்சியாளர் ஜஸ்டின் லங்கர் பேட்டியில் கூறியதாவது, இந்த தொடருக்கு பிறகு, அணியின் செயல்பாட்டை கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. அணியின் தலைவனை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் உள்ளது என கூறினார்.
முதலில் இங்கிலாந்து அணியுடன் 0-5 என்ற தோல்வி, தற்பொழுது முத்தரப்பு தொடர் தோல்வி என ஆஸ்திரலியா கிரிக்கெட் அணி தொடர்ந்து பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சில மாற்றங்களை கொண்டுவந்து தான் ஆக வேண்டும் என தெரிவித்தார்.
கேப்டன் பொறுப்பில் பின்ச்
மேலும், இங்கிலாந்துக்கு எதிராகவும் சரி, முத்தரப்பு தொடரிலும் சரி பின்ச் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு நிச்சயம் உதவும் . அவர் தற்போது டி20 கேப்டன் பொறுப்பில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
பின்ச் க்கு ஒருநாள் போட்டியிலும் கேப்டன் பொறுப்பு கொடுக்க மேலிடத்தில் பேசி வருகிறோம். நிச்சயமாக விரைவில் ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என லங்கர் கூறினார்.