கட்டை விரலில் பெரிய அளவிற்கு காயம் வைத்துக்கொண்டு இறுதிவரை தோனி போராடியது வீடியோ மற்றும் புகைப்படம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதற்க்கு ரசிகர்கள் பலர் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 92/6 என இருந்த நிலையில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இறுதிவரை போராடினர். ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், 49 ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். அப்போது அனைவருக்கும் இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என நம்பினர். அதற்க்கு அடுத்த பந்திலேயே தோனி 2 ரன்கள் ஓட முயற்சித்து கப்டிலின் சிறப்பான பீல்டிங்கால் மயிரிழையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது.
போட்டி முடிந்த பின் வீரர்களுக்கு கை குலுக்குகையில் தோனி தனது வலது கையை கீழே தொங்கவிட்டபடி இடது கையை மட்டுமே குடுத்து வந்தார். இதை பார்த்த ரசிகர்கள் தோனிக்கு என்னாயிற்று? என பல கேள்விகளை எழுப்பினர். இந்திய நிர்வாகமும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில், நேற்று ரசிகை ஒருவருடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டது. அதில் தோனியின் வலது கை கட்டைவிரலின் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புகைப்படத்தை நன்கு பார்க்கையில், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
தவான், விஜய் சங்கர் போன்றோர் சிறிய காயத்திற்க்கே தொடரைவிட்டு விலகியுள்ளனர். இந்நிலையில், பெரிய காயம் இருந்தும், இறுதி வரை வெளியே சொல்லாமல் அணிக்காக சிறப்பாக போராடிய தோனியின் இந்த செயல் பாராட்டுதலுக்கு உரியது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.