விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி பேசிய ரகசிய ஆடியோ! அவர்கள் பேசியது என்ன தெரியுமா ?

இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு தற்பொழுது இங்கிலாந்துக்குச் சென்று உள்ளனர். தற்பொழுது அவர்கள் மேலும் ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பின்னால் வருகிற 18-ஆம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி இருவரும் இணைந்து மைக் ஆன் ஆனது கூட தெரியாமல் கடைசியாக பேசியது ரெக்கார்டு ஆகியுள்ளது.

முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமியை பயன்படுத்திக் கொள்வோம்

அதில் விராட் கோலி முதலில் நியூசிலாந்து வீரர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நாம் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ரவுண்ட் தி விக்கெட் பந்து வீச வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இறுதியில் சரி என்றும் கூறியிருக்கிறார்.

தற்பொழுது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதைக் கேட்ட அனைத்து ரசிகர்களும் இது நியூசிலாந்து அணியை திசை திருப்ப செய்யும் யுக்தி என்றும் கூறியிருக்கின்றனர். நிச்சயமாக விராட் கோலி பேசியது போல் இறுதிப்போட்டியில் நடைபெற வாய்ப்பில்லை, ஏதேனும் ஒரு மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர்

18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆரம்பிக்கப்படும்.பின்னர் அது முடிந்தவுடன், இந்திய வீரர்கள் ஒரு மாத காலம் இங்கிலாந்தில் இருப்பார்கள். பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.