ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிச்சியாளர் டேரன் லீமெனுக்கு புதிய வேலை!!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிச்சியாளர் டேரன் லீமெனுக்கு புதிய வேலை!!
ஆஸ்திரேலியா அணியின் ராஜினாமா செய்த பயிற்சியாளர் டேரன் லீமென் தற்போது அந்த நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பது உயர்த்த ஒரு புதிய பயிற்சி வேலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த நாட்டின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள எதிர்கால கிரிக்கெட் வளர்ப்பு அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் டேரன்.
தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் மார்ச் விளையாடியது. இந்த நிலையில், கேப்டவுனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
Britain Cricket – Australia Nets – The Oval – June 4, 2017 Australia coach Darren Lehmann during nets Action Images via Reuters / Peter Cziborra Livepic
இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமித் மற்றும் வார்னர் ஆகியோர் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இருவரும் இந்த வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த தலைகுனிவை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. பந்து சேதப்படுத்தப்பட்ட சர்ச்சையில், பயிற்சியாளர் லீமனுக்கு தொடர்பு இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததால், அவர் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.
பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பந்து வீச்சு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தால் அதிருப்திக்குள்ளாகியுள்ள ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமன், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் முடிந்ததும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக லீமன் தெரிவித்துள்ளார்.
SYDNEY, NEW SOUTH WALES – MARCH 29: An emotional Steve Smith, the former Australian Test Cricket Captain, confronts the media at Sydney International Airport on March 29, 2018 in Sydney, Australia.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட லீமன், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக நான் செயல்படும் கடைசி டெஸ்ட் போட்டி இதுதான் என லீமன் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.