மத்தவுங்கள மாதிரி நான் இல்ல… நடக்க முடியாமல் போகும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்; கிளன் மேக்ஸ்வெல் சொல்கிறார் !!

மத்தவுங்கள மாதிரி நான் இல்ல… நடக்க முடியாமல் போகும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்; கிளன் மேக்ஸ்வெல் சொல்கிறார்

நடக்க முடியாமல் போகும் நிலை தனக்கு வரும் வரை ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி நாயகனான கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் ஐபிஎல் தொடரை போன்று தங்களது நாட்டில் உள்ளூர் டி.20 தொடரை நடத்தினாலும், எந்த தொடருமே ஐபிஎல் போன்று பிரபலமடையவில்லை என்பதே உண்மை. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது பல நாட்டு இளம் வீரர்களின் கனவை போன்றே மாறி வருகிறது.

அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் சில சீனியர் வீரர்கள் மட்டும் ஐபிஎல் தொடரை விட தங்களது நாட்டிற்கு விளையாடுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய வீரர்களே மிக அதிகம்.

பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியின் பல சீனியர் வீரர்கள், ஐபிஎல் தொடரை விட ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி நாயகனான கிளன் மேக்ஸ்வெல்லோ, நடக்க முடியாமல் போகும் காலம் வரும் வரை ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிளன் மேக்ஸ்வெல் பேசுகையில், “எனது கிரிக்கெட் வாழ்க்கை ஐபிஎல் தொடரில் தான் முடியும் என்றே கருதுகிறேன். நான் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியும் ஐபிஎல் தொடரில் தான் இருக்கும். நடக்க முடியாமல் போகும் காலம் வரை ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன். ஐபிஎல் தொடரின் மூலம் நான் அதிகமான விசயங்களை கற்றுள்ளேன். எனது கிரிக்கெட் கேரியல் ஐபிஎல் தொடர் மிக முக்கியமானது. ஐபிஎல் தொடரின் மூலமே டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற வீரர்களுடன் ஒன்றாக, தோளோடு, தோள் நின்று விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் இரண்டு மாத காலம் ஒன்றாக விளையாடும் வாய்ப்பு ஐபிஎல் தொடர் இல்லாவிட்டால் எனக்கு கிடைத்திருக்காது. ஐபிஎல் தொடரின் மூலம் நான் சந்தித்த சில மனிதர்கள், பயிற்சியாளர்கள் எனது கிரிக்கெட் கேரியரில் மிக முக்கியமானவர்கள்.  எதிர்வரும் காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் பல வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.