ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களின் சந்திப்பின் பொழுது ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் உடன் ஒப்பிடுவதற்கு இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தோனிக்கு பிறகு விருத்திமான் சஹா தான் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்வார் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், தனக்கு கொடுத்த வாய்ப்பை சகா ஒழுங்காக பயன்படுத்தவில்லை, இதன் காரணமாக வேறு வழியின்றி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்தி ரிஷப் பண்ட் இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
தற்பொழுது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஆக்கலாம் என்ற அளவிற்கு பேசப்பட்டுவரும் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல் அணியை திறம்பட வழிநடத்தி தன்னால் ஒரு அணியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதை உணர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசும் கருத்திற்கு, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ரிஷப் பண்ட் மற்றும் கிரிஸ்ட் ஆகிய இருவரிடம் ஒற்றுமை உள்ளதா என்று கேட்டால் சிறிய ஒற்றுமை உள்ளது என்று கூறலாம், ஆனால் ரிஷப் பண்டை 60 முதல் 70 டெஸ்ட் போட்டிகளில் முதலில் விளையாட விடுங்கள். பிறகு நாம் விக்கெட் கீப்பிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த கில் கிரிஸ்டுடன் ஒப்பிடலாம், ரிஷப் பண்ட் மற்றும் கில் கிரிஸ்ட் ஆகிய இருவருடைய குணங்களுக்கு வெவ்வேறாக இருக்கிறது, ரிஷப் பண்ட் எப்பொழுதும் ஆக்ரோஷமாகவும் சத்தமாகவும் கத்திக்கொண்டும் இருப்பார் ஆனால் அதற்கு நேர்மாறாக கிரிஸ்ட் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பார் ஆனால் பேட்டிங்கில் இருவரும் கிட்டத்தட்ட ஒன்றுதான், இருவருமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
இதற்கு உதாரணம், பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தோம் அப்பொழுது அந்த இரவை கடந்து விட்டால் அடுத்த நாள் எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படமுடியும், அப்பொழுது களத்திற்கு வந்த கில் கிறிஸ்டிடம் நான் இந்த நாளை விக்கெட் இழக்காமல் நாம் கடந்து விட்டோம் என்றால் நாளை பேட்டிங்கிர்க்கு மிகவும் உதவியாக இருக்கும், அதனால் பொறுமையாக விளையாடுங்கள் என்று கூறினேன், இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத கில்கிறிஸ்ட் அடுத்த பந்திலே சிக்சர் அடித்து அசத்தினார். அந்த நாளில் கிரிஸ்ட் மிகவும் அதிரடியாக செயல்பட்டார் ஆனால் விக்கெட்டை இழக்கவில்லை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.