வாங்க தம்பி மோதி பாக்கலாம்; விராட் கோலிக்கு சவால்விட்ட டிவில்லியர்ஸ் !!

ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு, ஏ.பி டிவில்லியர்ஸ் சவால் விளையாட்டாக சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியா வந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்றது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது. டி.20 தொடர், டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் என அனைத்தையும் கைப்பற்றிய இந்திய அணி இங்கிலாந்து அணியை வெறும் கையுடன் வழியனுப்பி வைத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு தொடர் முடிந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே, அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடர் குறித்து அனைத்து வீரர்களும் பேச துவங்கிவிட்டனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி முடிந்தபிறகு பேசிய அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துள்ளோம், இனி வரும் நாட்களில் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராவோம் என்றே தெரிவித்தனர். இந்திய கேப்டனான விராட் கோலியும் இதையே தெரிவித்தார்.

இனி வரும் நாட்களில் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாரகுவேன் என்று சொல்லிவிட்டு சென்றே விராட் கோலி, இன்று காலையே அதற்கான பயிற்சிகளையும் துவங்கிவிட்டார்.

உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்ட விராட் கோலி, அதில் ஓய்வு நாட்களே கிடையாது, இனி ஒவ்வொரு நாளும் வேகத்திற்கானது (ரன்னிங் பயிற்சி), என்று பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த பெங்களூர் அணியின் சக வீரரான அதிரடி வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ், விராட் கோலியின் தற்போதைய பார்ம் மிகவும் பிடித்துள்ளது, இந்தியா வருவதற்கு எனது உடைமைகளை தயார் செய்து விட்டேன் என பதிவிட்டு அதில் தான் கிளம்புவதற்கு தயாராக இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டார், இதற்கு பதில் கொடுத்த விராட் கோலி “போட்டியின் போது ரன் ஓடுவதில் உங்களது வேகம் இன்னும் குறைந்திருக்காது என நம்புகிறேன்” என பதிவிட இதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ் வாங்க மோதிபாப்போம் என்ற வகையில் “நாளை நமக்குள் ஓட்டபந்தயம் வைத்து தெரிந்து கொள்வோம்” என விளையாட்டாக சவால் ஒன்றையும் விடுத்துள்ளார்.

விராட் கோலி – டிவில்லியர்ஸ் இடையேயான இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mohamed:

This website uses cookies.