தல தோனியின் இடத்திற்கு சரியான ஆள் இவர் மட்டும் தான்… சென்னை அணியின் அடுத்த கேப்டனை சூசகமாக அறிவித்த மைக் ஹசி !!

தல தோனியின் இடத்திற்கு சரியான ஆள் இவர் மட்டும் தான்… சென்னை அணியின் அடுத்த கேப்டனை சூசகமாக அறிவித்த மைக் ஹசி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படலாம் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி ஹின்ட் கொடுத்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடரோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து விடுவார் என்பதால், சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி, சென்னை ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்துவிட்டு ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அணியை வழிநடத்த முடியவில்லை. இதன் காரணமாக சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்து பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இதன் காரணமாக மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இருந்த போதும் 40 வயதை கடந்து விட்ட தோனி 2023 ஐபிஎல் தொடரோடு ஓய்வை அறிவித்து விடுவார் என்பதால், சென்னை அணி வெகு விரைவில் தனது அணியின் கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை அணிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே போட்டியில் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை சென்னையை அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட், நியமிக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி ஹின்ட் கொடுத்துள்ளார்.

ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து மைக்கல் ஹசி பேசுகையில், “ருத்ராஜ் கெய்க்வாட் தோனியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவார், மற்ற வீரர்களை விட ருத்ராஜ் கெய்க்வாட் விஷயங்களை சீக்கிரமாக எடுத்துக் கொள்வார்.ருத்ராஜ் தன்னை தானே ஒரு கிரிக்கெட்டராக உருவாக்கியுள்ளார், மேலும் ஒவ்வொரு வீரர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வார்.

ஆனால் சென்னை அணி என்ன திட்டமிட்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது, ஆனால் தோனியை போலவே ருத்ராஜும் மிகவும் அமைதியானவர். அதேபோன்று தோனியை போலவே நெருக்கடியை மிக எளிதாக கையாள்வார். மேலும் போட்டியை எளிதாக புரிந்து கொள்வார். ஒட்டுமொத்தத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் மிகச் சிறந்த தலைமைத்துவம் படைத்த ஒரு வீரர்” என மைக்கேல் ஹசி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.