இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் வர்ணனைப் பணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 24 முன்னாள் வீரர்களின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியர்கள் மூன்று பேரும், கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த மைக்கேல் கிளார்க்கும் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.
மேலும், லண்டன் எம்சிசி கிளப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், வங்கதேச வீரர் அத்தர் அலி கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் போட்டியின் நேரலை வர்ணனையை சில வீரர்கள் செய்யும்போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீரர்களின் பேட்டிங் செய்யும் வித்தையும், அடிக்கும் ஷாட்களையும், எவ்வாறு ஷாட்டை ஆடியிருக்கக்கூடாது, பந்து எவ்வாறு வீசி இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாகக் கூறுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், தங்களின் அனுபவங்களையும், இப்போதுள்ள வீரர்களின் திறமைகளையும் குறிப்பிட்டு பேசவதை கேட்பது ரசனையான ஒன்றாகும்.
சில வர்ணனையாளர்கள் சர்ச்சையாகவும் பேசுவதுண்டு, சிலர் நகைச்சுவையாகப் பேசி பார்க்கும் ரசிகர்களையும் கலகலப்பாக வைத்திருப்பார்கள். அந்தவகையில் முன்னாள் வீரர்களை வர்ணனையாளர்களா பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளது ஐசிசி.
அந்த கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த பிரண்டன் மெக்கலம் இந்தமுறை வர்ணனையாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
வர்ணனையாளர்கள் பட்டியல்:
1. நாசர் ஹூசைன
2. மைக்கேல் கிளார்க்
3. இயான் பிஷப்
4. சவுரவ் கங்குலி
5. மிலானே ஜோன்ஸ்
6. குமார் சங்கக்கரா
7. மைக்கேல் ஆர்தர்டன்
8. அலிசன் மிட்ஷெல்
9. பிரன்டன் மெக்கலம்
10. கிரேம் ஸ்மித்
11 வாசிம் அக்ரம்
12. ஷான் போலக்
13. மைக்கேல் ஸ்லாட்டர்
14. மார்க் நிகோலஸ்
15. மைக்கேல் ஹோல்டிங்
16. இஷா குஹா
17. போமி பாங்வா
18. சஞ்சய் மஞ்ரேக்கர்
19. ஹர்ஷா போக்லே
20. சைமன் டோல்
21. இயான் ஸ்மித்
22. ரமிஸ் ராஜா
23. அதர் அலி கான்
24. இயான் வாட்