14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
1986ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி விபரங்கள்:-
1984 – இந்தியா
1984ம் ஆண்டு ரோத்மன்ஸ் ஆசியக் கோப்பை போட்டி இறுதிப்போட்டி ஐக்கிய அரபு எமீரக நாட்டின் சார்ஜா நகரில் நடைபெற்றது. இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் ஆசியக்கோப்பையை கைப்பற்றியது.