உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, கபில்தேவ், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தொடங்கி யுவராஜ் சிங், உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் வரை பந்து வீச்சாளர்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். அவற்றில் ஒரு பகுதியாக உலக கோப்பை தொடரில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலை தான் இங்கு காணலாம்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் மிகச் சிறப்பாக பந்துவீசி சரியான நேரங்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகின்றனர். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நடுத்தர ஓவர்களில் குல்தீப் மற்றும் மகள் இருவரும் ரன்களை கட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி தருகின்றனர்.
இதுபோன்று இதற்கு முந்தைய உலகக் கோப்பை தொடர்களிலும் வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகிர் கான், கபில் தேவ் மற்றும் ஆசிஸ் நெஹரா ஆகியோர் அபாரமாக பந்து வீசி பல வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளனர். சுழல் பந்து வீச்சில் அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்ந்துள்ளனர்.
அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியல்
- முகமது சமி – 3 முறை
- ஜவகல் ஸ்ரீநாத் – 2 முறை
- ஆஷிஷ் நெஹ்ரா – 2 முறை
- உமேஷ் யாதவ் – 2 முறை
- யுவராஜ் சிங் – 2 முறை
முகமது சமி 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஒரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்ததாக, தற்போது நடைபெற்று வரும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்த இரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கோப்பை தொடரில் அதிக முறை 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.