ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை வெளியேறிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியல்!!
எப்படியோ இன்னும் 2 வாரத்தில் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டுவிட்டது. முதல் போட்டியில் வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த வருடம் பல பிரச்சனைகள் இருந்தாலும் வீரர்களுக்கும் மனரீதியான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல வீரர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இந்த வருட ஐபிஎல் தொடரில் தற்போது வரை விலகிய வீரர்களின் பட்டியல் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியலை பார்ப்போம்
ஹர்பஜன்சிங்
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆவார். கடந்த இரண்டு வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 40 வயதான இவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இதனை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இவருக்கான மாற்று வீரரை தற்போது வரை இன்னும் அறிவிக்கவில்லை.