ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் எல்லாம் ஆட மாட்டார்கள்! பல அணிகளுக்கு பேரிடி!

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பி.சி.சி.ஐ. செய்து வருகிறது. அதேவேளையில், அணிகளின் வீரர்களும், கொரோனா பரிசோதனைக்கு பிறகு, பயிற்சி முகாமில் இணைந்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டதால், இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் அனைத்து வீரர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், செப்டம்பரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் இருப்பதால், அந்த இரு நாடுகளின் வீரர்கள், ஐ.பி.எல். தொடரின் முதல்வார போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே செப்.,4ம் தேதி முதல் 16ம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல் வார ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இது ராஜஸ்தான் அணிக்கே பெரும் இழப்பாக உள்ளது. அந்த அணியில், ஜோஸ் பட்லர், ஜாஃ.ப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ்,டாம் கர்ரன், ஸ்டீவ் ஸ்மித், அண்ட்ரூ டை, ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சென்னை அணியை பொறுத்தவரையில், ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ், மோர்கன், டாம் பாண்டன் ஆகியோர் முதல் வார போட்டியில் விளையாட மாட்டார்கள்.

டுவிட் வார்னர், பேர்ஸ்டோவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் முதல் வார போட்டிகளில் பங்கேற்காதது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பின்னடைவாக உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன் இடம் பிடித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸை பொறுத்தவரையில் ஜேசன் ராய், அலேக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் 2வது வாரம் முதலே போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்வார்கள். இடம் பிடித்துள்ளனர்.

கிங்ஸ் லெவன பஞ்சாப் அணியில் கிளென் மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
மும்பை அணியில் மட்டும் யாரும் இடம் பெறவில்லை.

Mohamed:

This website uses cookies.