ஒவ்வொரு வீரரும் தனது அணிக்காக விளையாட விரும்புவர். அவர்களது கனவும் அதுவாகவே இருக்கும். ஆனால் தனது அணி முதல் முறை டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆடும் முதல் போட்டி என்றால் சிறப்பு தான். அதுவும் முதல் போட்டியில் அணியில் இடம் பெற்று அணிக்காக முதல் விக்கெட் வீழ்த்தினால் வரலாற்று சிறப்பு தானே.
12வது அணியாக டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடி வருகிறது. ஜூன் 14 முதல் 18 வரை நடக்கும் போட்டியில் முதன் நாளில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களம் இறங்கிய இந்திய துவக்க வீரர்கள் ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் சதம் விளாசினார். அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 97 பந்துகளில் 107 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இவர் ஒரு சேஷனில் சதம் விளாசிய முதல் இந்தியர் எந்த சாதனையையும் படைத்தார்.
பிறகு, நிதானமாக ஆடிய முரளி விஜய் சதம் விளாசினார். அவர் 105 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பிறகு ஒவ்வொருவராக ஆட்டம் இழக்க, முதல் நாள் முடிவில் இந்திய அணி 78 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானை வீழ்த்தி முஹம்மத் அஹமத்சை வரலாற்று சாதனை படைத்தார். இவ்வாறு ஒவ்வொரு அணிக்காகவும் முதல் விக்கெட் வீழ்த்தியவர்களை பின்வருமாறு பார்ப்போம்.
1. இங்கிலாந்து: ஆலன் ஹில்
டெஸ்ட் போட்டிகள் அறிமுக படுத்தப்பட்ட பொழுது, இங்கிலாந்து அணிக்காக கேப்டனாக இருந்தவரும் இவர் தான்.
1877ம் ஆண்டு ஆஸ்திரலியா விற்கு எதிரான போட்டியில் இவர் எடுத்த விக்கெட் தான் கிரிக்கெட் வரலாற்றின் முதல் விக்கெட். இன்றளவும் கிரிக்கெட் வரலாற்றின் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.