பிங்க் பந்து டெஸ்ட் போட்டி வெற்றியின் மூலம் விராட் கோலி படைத்த சாதனைகளின் பட்டியல்!

இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய கேப்டனாக விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணி ஏற்கெனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று இருந்தது. அத்துடன் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இருந்தது.

மேலும் இன்றைய டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்று இருந்தது சாதனையாக இருந்தது. விராட் கோலி தலைமையிலான அணி இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்யும் 11ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஏற்கெனவே கடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றதன் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். தற்போது விராட் கோலி அந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் கேப்டனாக 19 சதங்கள் அடித்திருந்தார். அதை உடைத்த கோலி கேப்டனாக 20-வது சதத்தை நிறைவு செய்தார்.முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 25-வது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஆகியவற்றில் தனது 70-வது சதத்தை கோலி அடித்துள்ளார். மேலும், விராட்கோலி 32 ரன்கள் சேர்த்தபோது, கேப்டனாகப் பதவியேற்று 5 ஆயிரம் ரன்களை நிறைவு செய்தார்.

இதன் மூலம், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை உடைத்த கோலி, இந்திய அளவில் கேப்டனாக டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

குறிப்பாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு ஏற்று கோலி 41 சதங்களை அடித்து, ரிக்கி பாண்டிங் 41-வது சதத்தை நிறைவு செய்தார்.

Sathish Kumar:

This website uses cookies.