இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றிவிடும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் காண்கிறது.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளின் தரப்பிலும் கடந்த போட்டியில் விளையாடியவர்களே இந்த போட்டியிலும் விளையாட உள்ளனர்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்
1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. சுரேஷ் ரெய்னா, 5. கேஎல் ராகுல், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. சித்தார்த் கவுல், 9. உமேஷ் யாதவ், 10. சாஹல், 11. குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்
ஜேசன் ராய், ஜான்னி பெர்ஸ்டவ் ,ஜோ ரூட், இயான் மார்கன் (கேப்டன்), பென்ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கீப்பர்), மோயின் அலி, டேவிட் வில்லி, லியாம் பிளங்கட், அடில் ரஷித், மார்க் வூட்,
இந்த போட்டியில் பென் ஸ்டோக்சின் கேட்ச்சினை பிடித்த கீப்பர் தோனி ஒருநாள் போட்டிகளில் 300 கேட்ச்கள் பிடித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார்!
தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்துள்ள வீரர்கள் பட்டியல் கீழே
1.ஆடம் கில்கிறிஸ்ட் – 417 கேட்சுகள்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் மற்றும் உலகின் சிறந்த கீப்பர்களில் ஒருவரான இவர் மொத்தம் 417 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
மொத்தம் 287 ஒருநாள் போட்டியில் இவர் 417 கேச்சுகள் பிடித்துள்ளார். இதனால் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.