வீரர்கள் தேர்வில் எந்த அரசியலும் இல்லை ; கங்குலி
இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு வெளிப்படையாகவே நடைபெற்று வருவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோவையில் டாக்டர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி கண் விழிப்புணர்வு தொடர்பான வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தமிழகம் வந்துள்ளார்.
இதனை கங்குலி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நான் முதல் முதலாக தற்போது தான் கோவை வந்துள்ளேன். இதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோவை மிகவும் தூய்மையான நகரமாக உள்ளது. எனக்கு பிடித்த நகரத்தில் இதுவும் ஒன்று.
கண் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் கண்ணை இழந்தால் 50 சதவீதம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது அணி வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடி வருகிறார்கள். இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.
மற்ற நாட்டை காட்டிலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் தேர்வு வெளிப்படையான செயலாக உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் திறமையாக விளையாடி வருகின்றனர். அவர்கள் சிறுத்தை போல் செயல்படுகிறார்கள். 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் பல வெற்றிகளை குவித்து வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிரிக்கெட்டில் மணிஷ் பாண்டே, விர்த்திமான் சகா, ஹர்த்திக் பாண்டியா ஆகிய இளம் வீரர்கள் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார்கள். இந்தியாவின் செஸ் போட்டி நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.