துவக்க முதலே அடித்தாடினேன்: ஆட்டநாயகன் டிம் செய்பெர்ட்!

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பாண்டியா 2 விக்கெட் எடுத்தாலும் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினார்.

2016 ஆகஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 245 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களை எடுக்கவில்லை. இன்று நியூஸிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்து இந்திய அணி பந்துவீச்சைப் பதம் பார்த்துவிட்டது.

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து தவான் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது தவான் 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

விஜய் சங்கர் 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 4 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

டோனி 31 பந்தில் 39 ரன்களும், குருணால் பாண்டியா 18 பந்தில் 20 ரன்களும் அடிக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதி நடக்கிறது.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் மட்டும் எடுத்து 80 ரன்களில் வித்தியாசத்தில் தோற்றது. டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியின் மோசமான தோல்வி இது. இதற்கு முன்பு 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதுதான் பெரிய தோல்வியாக இருந்தது. அதை இன்றைய டி20 ஆட்டம் மாற்றியுள்ளது.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தாத ஆட்டம் இது.

Sathish Kumar:

This website uses cookies.